in

பின்னங்கால் நரம்பு இழுத்தல், நரம்பு தளர்ச்சி, முதுகுவலி, இடுப்பு வலிக்கு இதை மட்டும் சாப்பிடுங்க.

சில நரம்புகள் மூளையில் இருந்து தசைகளுக்கு தகவல்களை கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டு, உடலின் இயக்கத்திற்கும், இதர நரம்புகள் வலி, அழுத்தம் அல்லது வெப்பநிலை குறித்த தகவல்களை அனுப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

தகவல்களை முறையாக சுமந்து செல்வதற்கு, ஒவ்வொரு நரம்புகளுக்கு உள்ளேயும் தொகுக்கப்பட்ட சிறிய இழைகள் உள்ளன. இவைகள் நரம்புகளுக்கு பாதுகாப்பையும் வழங்குகின்றன. இருப்பினும் சில சமயங்களில் நரம்புகள் பாதிப்படைகின்றன. நரம்பியல் சீர்கேடுகள் மற்றும் ஸ்ட்ரோக் தேசிய நிறுவனத்தின் படி, சுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் புற நரம்பு சேதம் என்று அழைக்கப்படும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

நரம்பு பாதிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அளவுக்கு அதிகமான அழுத்தமானது குறிப்பிட்ட நரம்புகளுக்கு கொடுக்கப்படும் போது, அந்த நரம்பு முறிவதற்கு வாய்ப்புள்ளதாம்.

சில சமயங்களில் சர்க்கரை நோய், லைம் நோய், அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பது, அதிகமாக மது அருந்துவது, முதுமை, வைட்டமின் குறைபாடுகள், அதிகமான டாக்ஸின்கள், நோய்த்தொற்றுகள், ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி, ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்றவற்றாலும் நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

அடிக்கடி ஏன் கால் வலி என்கிறோம்?

காலின் ஆழ்ந்த ரத்த குழாயில் உணர்வு ஏற்பட்டிருக்கலாம். நீண்ட காலம் படுக்க வேண்டிய உடல் பாதிப்பு ஏற்படும் பொழுது கால்களுக்கு பயிற்சி இல்லை என்றால் இவ்வாறு ஏற்படலாம். வீக்கம், பிடிப்பு, வலி ஏற்படலாம். மூட்டு வலி, மூட்டு தேய்மானம் அதிகமாகக் காணப்படும் ஒன்று. எலும்பிலோ, சதையிலோ கிருமி பாதிப்பு ஏற்பட்டு வீக்கம், சிவந்து போதல், வலி ஆகியவை ஏற்படலாம்.

நரம்பு பாதிப்பினால் வலி, மரத்து போகுதல், குறு குறுத்தல் ஏற்படலாம். திடீரென கனமான ஒன்றினை தூக்குவது, கோணலாய் திரும்புவது. அதிக உழைப்பு போன்றவை சதைகளுக்கு அதிக சோர்வினை ஏற்படுத்தலாம். இவை கீழ் முதுகு, கழுத்து, தோள் பட்டை, தொடையின் பின்புறம் இவற்றில் பொதுவாய் ஏற்படும். பாதிப்புள்ள பகுதியில் மட்டுமே வலி இருக்கும். இதற்கு ஐஸ் ஒத்தடம், சூடு ஒத்தடம், வலி நிவாரண மாத்திரைகள் போதும். வலி கூடுதலாக இருப்பின் மருத்துவ உதவி தேவை.

இந்த சதை சோர்வின் வலி

  • திடீரென ஏற்படும் வலி
  • அசைவுகள் குறைதல்
  • பாதிப்புள்ள இடத்தில் நிறமாற்றம்
  • வீக்கம்
  • பாதிப்புள்ள இடத்தில் பலவீனம்.

இவையெல்லாம் அறிகுறிகளாக அமையும்.

சரி இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகின்றது.

உடற்பயிற்சிக்கு முன் முறையாக உடலினை (warming up) என தயார்படுத்தாது இருத்தல். முறையான உடல் உழைப்பு இன்மை.

  • அல்லது அதிக உழைப்பு ஆகியவை ஆகும்.
  • கால் தடுப்பது
  • ஓடுவது
  • குதிப்பது
  • அதிக கனத்தினை தூக்குவது இவைகள் திடீரென தசை பாதிப்பினை ஏற்படுத்தும்.

இந்த சதை வலிக்கு முதல் நிவாரணம் ஓய்வு தான். பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓய்வு வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுங்கள். சுமார் 20 நிமிடங்கள் கொடுங்கள். முதல் நாளன்று 4&5 முறை இவ்வாறு செய்யுங்கள். அடுத்த நாள் முதல் 4 மணி நேரம் அல்லது 6 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒத்தடம் கொடுங்கள். தேவைப்பட்டால் எலாஸ்டிக் பாண்டேஜ் உபயோகிக்கலாம். ஆனால் அதிக இறுக்கம் கூடாது.

கால், கைகளில் அடிபட்டிருந்தால் தலையணை கொண்டு கால், கையை உயர்த்தி வையுங்கள்.
வலி நிவாரண மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அடிபட்ட இடத்தில் சூடு ஒத்தடம் கொடுங்கள்.

அதிக ஓய்வும் தவறு. வலி நீங்கு நிவாரணம் பெற்றவுடன் பயிற்சிக்கு முன் (warm up) பயிற்சி செய்யுங்கள் எடுத்தவுடனே நாம் பயிற்சி செய்வது உறுப்புகளை பாதிப்படைய செய்யும். வலி மிக அதிகமாக இருந்தாலோ, பாதிக்கப்பட்ட இடம் மாறி போயிருந்தாலோ, அசைவுகள் கடினமாக இருந்தாலோ உடனடி மருத்துவ ஆலோசனை பெறுக.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0