in

சேப்பங்கிழங்கு சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும்.

இந்த கிழங்கை புளிக்குழம்பு, வறுவல், பொரியல் என பல வகைகளில் சமைக்கப்படுகின்றது.

மக்கள் இதை உணவுக்காகவோ அல்லது அலங்காரத் தாவரமாகவோ வளர்க்கின்றனர்.

சேப்பக்கிழங்கு பல மருத்துவ பயன்களையும் வழங்குகிறது. தற்போது இந்த கிழங்கை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

சேப்பங்கிழங்கில் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் இல்லாத காரணத்தால் பாதத்தில் இருக்கின்ற ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த மட்டும் இது துணை புரிந்து சேற்றுபுண்கள் வேகமாக குணமாக உதவுகிறது.

உடல் எடையை குறைப்பதில் சேப்பங்கிழங்கு மிகவும் உதவி புரிகின்றன. இது கொழுப்பு இல்லாதது. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் எடை குறைப்பிற்கு சிறந்த இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது.

சேப்பங்கிழங்கில் இந்த ஃபோலேட் சத்து அதிகம் உள்ளதால் கருவுறுதலுக்கு முந்தைய காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் போதிய அளவு போலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், நரம்புக் குழாய் பாதிப்பு மற்றும் இதர பிறப்பு குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும்.

சேப்பங்கிழங்கை அரைத்து பூச்சிக் கடி பட்ட இடத்தில் தடவுவதால் உடலில் பரவும் விஷம் முறிகிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்கனவே சாப்பிட்ட உணவில் கலந்திருக்கும் நஞ்சும் முறிந்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

மனிதன் ஆரோக்கியமாக இருக்க அவனது உடலில் அமிலம் மற்றும் காரச் சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும்.

கால்சியம் க்ளோரைடு, மனித உடலில் அமிலம் மற்றும் காரத்தன்மையின் சமநிலையை நிர்வகிக்க தேவைப்படும் ஒரு முக்கிய சத்தாக இருக்கிறது. எனவே சேப்பங்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் உடலின் அமில, காரத்தன்மையை சரிசமமாக வைத்திருக்கலாம்.

சேப்பங்கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது.

செரிமானக் கோளாறுகளுடன் மலச்சிக்கல், வாயு சேர்த்தல் மற்றும் இதர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் கொண்ட இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. இதில் இருக்கும் மாவுப்பொருள் ஒரு இயற்கைய மலமிளக்கியாக செயல்படுகிறது.

அரிப்பைப் போக்க சேப்பங்கிழங்கை சாப்பிடுவதன் மூலமும், அந்த சேப்பங்கிழங்கை அரைத்து சரும பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவுவதன் மூலமும் சரும வியாதிகள் அனைத்தையும் வெகு சீக்கிரத்தில் போக்க முடிகிறது.

வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சேப்பங்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் ஜீரண உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0