ஒரு முறையாவது ஏதோ ஒரு திசையிலில் இருந்து சென்னையை நோக்கி பயணித்திருப்போம். அப்பொழுது ஆங்காங்கே காணப்படும் கி.மீ கல்லில் சென்னை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என எதிர்பார்த்து காத்திருப்போம். நம்மை பொறுத்த வரைக்கும், நாம் வந்து இறங்கும் இடம் தான் நமக்கு சென்னை. ஆனால் சரியாக சென்னையின் “ஜீரோ பாயிண்ட்” புனித ஜார்ஜ் கோட்டை பக்கத்தில் உள்ள முத்துசாமி மேம்பாலத்தின் நடுவில் உள்ளது. இதன் அடிப்படையில் தான், ஒவ்வொறு மைல் கல்லிலும் சென்னை இத்தனை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்பு இருந்தாலும், இந்த இடம் சென்னையின் மைய பகுதி அல்ல. ஆனால் சரியாக அந்த இடத்தை தேர்வு செய்ய காரணம், ஜார்ஜ் கோட்டை இருந்த காரணத்தினால் தான். அந்த ஜீரோ பாயிண்டில் இருந்து ஜி.எஸ்.டி ரோடு எனப்படும் NH 45 ஒரு திசையிலும், NH 5 ஒரு திசையிலும், பெங்களூர் ஹவேயான NH 4 ஒரு திசையிலும், மற்றொரு திசையில் வங்காள விரிகுடாவும் அமைந்துள்ளது.
Loading…