in

சிஸேரியன் குழந்தைகள்

சிஸேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது எனவும் ஒவ்வாமைப் பிரச்சனைகள் அதிகம் உள்ளது என்றும், சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சிஸேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகள் போதுமான வளர்ச்சிக்கும் முன்னதாகவே அறுவை சிகிச்சை செய்து பிறப்பதால் அவற்றிற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் உடல் வளர்ச்சி குறைவாகவும் இருப்பதால் அவர்களுக்கு எந்த ஒரு சாதாரணப் பொருளும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றனவாம்.

சிஸேரியன் செய்ய அறிவுறுத்தும் மருத்துவர்கள் இவற்றை கருத்தில் கொள்வார்களா?

இனிய இல்லறமே நல்ல ஆரோக்கியம்

அமெரிக்காவில் டெக்ஸால் மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் நல்ல இல்லற வாழ்க்கை அமைந்த தம்பதியினரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதாகவும், இல்வாழ்க்கையிலும் உடலுறவிலும் குறைபாடு உள்ள தம்பதியினருக்கு மட்டுமே ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நல்ல குடும்ப வாழ்க்கையும் உடலுறவில் குறைபாடு இல்லாத தம்பதியினரின் ஆரோக்கியம் நன்றாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதாம். குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், மாரடைப்பு, கேன்ஸர் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் அனைவருக்குமே இல்லற வாழ்க்கையின் குறைபாடு இருந்ததாக சொல்லப்படுகிறது. இனிய இல்லறம் அமைப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

வேலைக்குச் செல்லும் தம்பதியினரின் குழந்தைகள்

வேலைக்குச் செல்லும் தம்பதியினரின் குழந்தைகளின் மனநிலையில் சில மாற்றங்கள் இருப்பதாகவும் அவர்களின் உடல் வளர்ச்சியில் குறைபாடும், மன வளர்ச்சியில் குறைபாடு இருப்பது உறுதியாகியுள்ளது.

வேலைக்குச் செல்லும் தம்பதியினரின் குழந்தைகள் அன்புக்கு ஏங்குபவர்களாகவும், கவனிப்பாறற்றும் இருப்பதால் அவர்களுக்கு நிலையான அன்பு எப்பொழுதும் தேவைப்படுகின்றது. அவர்களில் தான் தந்தையர் திடீரென வந்து அன்பைப் பொழிவதாலும் அவர்களை பல நாட்கள் வேலைப் பளுவின் காரணமாக கவனிக்காமல் விட்டுவிடுவதாலும் அவர்களின் ஹார்மோன் சுரப்புகள் ஏற்ற இறக்கங்களை காண வேண்டியுள்ளது.

தாய் தந்தையரின் அன்பைப் பெறும் நாட்களில் ஹார்மோன் சிறப்பு உற்சாகமாக உள்ளது. அவர்களில் அன்பைத் தொடர்ந்து பெறாத நாட்களின் அவர்களின் ஹார்மோன் சுரப்பு தொய்வடைகின்றது. இது அவர்களின் வளர்ச்சியை, அதுவும் குறிப்பாக பெரிய குழந்தைகளின் வளர்ச்சியையும் மாதவிடாய் சுழற்சியையும் சீர் கெட வைக்கின்றன.

இன்றைய கால கட்டத்தில் தாய் தந்தையர் இருவருமே வேலைக்குச் சென்றால் தான் வாழ்க்கைச் சக்கரத்தைத் சுழல வைக்க முடியும் என்பது நிதர்சனமான மறுக்க முடியாத உண்மை. ஆனால் தாய் தந்தையர் அவர்களது அலுவலகப் பிரச்சனைகளை வீட்டின் வெளியே செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே நுழைவதைப் போல, பிரச்சனைகளை வீட்டிற்கு வெளியே விட்டு விட்டு குழந்தைகளிடம் எப்பொழுதும் மாறாத அன்பைச் செலுத்தலாமே. இது அவர்களின் கையில் தானே உள்ளது. முயற்சிக்கலாமே.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0